சொந்தத் தாயைக் கற்பழித்ததுடன், மறுநாளே தனது ஏழு வயது மகளுக்கு முன்னிலையில் மீண்டும் அத்துமீற முயன்ற 39 வயதுடைய பெண்ணொருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இப்பயங்கர குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பெண், 22 வயதுடைய மாணவி ஒருவரைக் கற்பழித்ததாகத் தொடரப்பட்டுள்ள மற்றொரு வழக்கிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
குறித்த பெண், கடந்த 2020ஆம் ஆண்டில் 10 வயதுச் சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக, ஏற்கனவே 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது தாயைக் கற்பழித்ததாகக் கூறப்படும் சம்பவம், 10 வயதுச் சிறுமியைக் கடத்துவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே இடம்பெற்றுள்ளதாக அரச வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கிரீஸின் தெசலோனிகி (Thessaloniki, Greece.) நகரிலுள்ள அவர்களின் குடியிருப்பில், கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியன்று, குறித்த பெண் தனது தாயார் மீது வன்முறையைப் பிரயோகித்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளே தனது தாயை மீண்டும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ய அவர் முயன்றுள்ளார்; இம்முறை இக்கொடூரச் செயலைத் தனது 7 வயது மகளுக்கு முன்னிலையிலேயே செய்ய முயன்றுள்ளார். எனினும், அவரது தாயார் அவரைத் தாக்கித் தடுத்து நிறுத்தியதுடன், உடனடியாகப் பொலிஸாரையும் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார்.
பொலிஸார் வருவதற்குள், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அப்பெண் அங்கிருந்து தப்பியோடியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், 22 வயதுடைய மாணவி ஒருவரைக் கற்பழித்த குற்றச்சாட்டிலும் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சம்பவம், 2020ஆம் ஆண்டில் 10 வயதுச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த மாணவியின் பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, அதே குடியிருப்பில் வைத்து அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பானத்தைக் அருந்திய பின்னர் அம்மாணவி கழிப்பறைக்குச் சென்றபோதே, அவர் மீது இக்கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது, அப்பெண்ணுக்கு எதிராகக் குடும்பக் கற்பழிப்பு மற்றும் மைனர் சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!