திருகோணமலை, சீனக்குடா மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை ரயில் மோதி இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாத்தறை மற்றும் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 48 , 58 வயதுடைய மீனவர்களே உயிரிழந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இந்த மூன்று நபர்களும் மோதுண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பயண வழிகாட்டி
குறித்த விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!