வெயங்கொடை, மங்களேகொட - நைவல வீதியில் வேன் ஒன்று வீதியோரத்தில் காணப்பட்ட மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், அவரது 80 வயதுடைய பாட்டியுமே உயிரிழந்துள்ளனர்.
மூத்த சகோதரியின் திருமண விழா நிறைவடைந்த பின்னர், வெயங்கொடை- ஹீந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மணப்பெண்ணின் சகோதரரான 21 வயது இளைஞரே வேனைச் செலுத்திச் சென்றுள்ளதுடன், அதில் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்ளிட்ட 9 பேர் பயணித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் வேனில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி வேனைச் செலுத்திய சகோதரனும் அவரது பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்த ஏனைய 7 பேரும் தொடர்ந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!