news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திருமணப் பத்திரிகையிலேயே இத்தனை பிரம்மாண்டமா? அனிருத் - காவ்யா மாறன் Wedding!

23 Oct, 2026
சொகுசு பரிசுப் பெட்டியில் அனிருத் - காவ்யா மாறன் திருமண அழைப்பிதழ்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணப் பத்திரிகை (அழைப்பிதழ்) சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21, 2026 அன்று நடைபெற உள்ளது.




இந்த திருமண அழைப்பிதழ் மிகவும் பிரம்மாண்டமான ஒரு பாக்ஸ் (Invitation Box) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் ஒரு சாதாரண அட்டை போல் அல்லாமல், மிகவும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் ஒரு சொகுசு பரிசுப் பெட்டி (Luxury Gift Box) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Content from blocked embed
Anirudh -Kavya Maran Wedding invitation.. #Anirudh #SunPictures https://t.co/1O6kndRfXB— null.memer 👾 (@cricketfre64019) October 22, 2026


இந்த பெட்டியில், திருமண வரவேற்பு விபரங்கள் அடங்கிய பிரதான அழைப்பிதழுடன், பிரத்யேகமான பரிசுப் பொருட்களும், இனிப்புகளும் இருக்கிறது.


இணையத்தில் இதுவே தற்போதைய மிகவும் விலையுயர்ந்த திருமணப் பத்திரிகையாக விவாதிக்கப்பட்டு வருகிறது

இவர்களது திருமண விழா நவம்பர் மாதம் (குறிப்பாக நவம்பர் 10-11 தேதிகளில்) கிரீஸ் நாட்டில் (Destination Wedding) நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!