news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் அபராதம்

13 Aug, 2026
பலரும் மதுவிற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கிராமத்தில் மது அருந்தக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்தினால் 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும், திருமணம் ஆனவர்கள் மது அருந்திவிட்டு ஏதேனும் பிரச்சனை செய்தால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தின் பொது அமைதி மற்றும் இளைஞர்களின் நலனைக் கருத்திற்கொண்டு கடந்த ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் இக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஒலிபெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. மதுப்பழக்கத்தால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகச் சீரழிவுகளைத் தடுத்து, இளைய சமுதாயத்தைக் காப்பாற்றும் இத்தகைய முன்மாதிரியான முயற்சிக்குச் சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.



கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!