news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திருமணம் கடந்த உறவு... கணவர், மாமனாரை கொன்று எரித்த பெண்! - சிக்கியது எப்படி?

16 May, 2026
ராணுவத்தில் பணியாற்றும் மகேஷ்குமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த பானுப்பிரியாவைத் திருமணம் செய்தார். அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக இரண்டு மகன்கள் இருக்கின்றனர்

திருமணம் கடந்த உறவைக் கண்டித்த கணவரையும் மாமனாரையும் கொடூரமாக ஒரு பெண் கொலை செய்து எரித்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

11-5-2026 அன்று காலை கிருஷ்ணகிரியிலிருந்து ராயக்கோட்டைக்குச் செல்லும் சாலையில், பூவத்தி அருகே சாலையோரம் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் இரு உடல்கள் கருகிய நிலையில் கிடப்பதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சாக்கு மற்றும் துணியால் சுற்றி எரிக்கப்பட்டு சடலமாகிக் கிடந்த அவர்கள் யார்... எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்... கொலையாளிகள் யார் என்பதைக் கண்டறிய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் 5 தனிப்படைகளை அமைத்தனர். 

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொல்லப்பட்டுக் கிடந்தது அருகிலுள்ள பாலகுறி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்குமார் என்பதும், அவருடைய தந்தை செல்லப்பன் என்பதும் தெரியவந்தது. அவரும் முன்னாள் ராணுவ வீரர்.

தொடர் விசாரணையில், தன் திருமணம் கடந்த உறவை கணவரும் மாமனாரும் கண்டித்ததால் கொலைசெய்ததாக மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியா தெரிவித்திருக்கிறார். 

காதலன் பூவரசனும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!