யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் திலீப னின் (இராசையா பார்த்தீபன்)
திருவுருவச்சிலை நிறுவப்பட்டமை தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் பொலிஸார் வாக்
குமூலம் பதிவு செய்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறி யுள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் திலீபனின் 39ஆம் நினைவு நாள் விழாக்கள் நிறைவடைந்த மறுநாளான செப்ரெம்பர் 27 அன்று, திலீபன் நினைவிடத்திலிருந்து சிலை அகற்றப்பட்டது குறித்து அர்ச்சுனா இராமநாதன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், திலீ பனின் சிலைக்கு மற்றும் நிகழ்வுக்கு நிதியளித்தமை, சிலை அமைத்தமை, ஊக் குவித்தமை மற்றும் நிகழ்வு ஒழுங்குகளை மேற்கொண்டமை ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறப்படும், சுமார் 14 நபர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய் துள்ளனர்.
அதனடிப்படையில் பொலிஸார் மேலதிக விசார ணைகளை ஆரம்பித்துள்ள னர். திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பது உறுதி செய்யப்பட்டள்ளதாக கூறியதுடன், பொலிஸார் சிலையை பொறுப்பேற்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து.
வழங்கு சான்றுப் பொருளாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப் படையில் மேலதிக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜே பால தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,சிலையை அகற்றுவதற்கு முன்னர் காவல் துறை உரிய நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவித்ததாகவும், விடுதலைப் புலிகள் உட்பட தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிப்பதை இலங்கைச் சட்டம் தடைசெய்கிறது என்றும் குறிப்பிட்டார். இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் மேற்கொண்ட 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தியாகி திலீபன் தனது உயிரை ஈகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!