news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தீ விபத்து: ஒரே குடும்பத்தில் நால்வர் பலி

20 Nov, 2026
கடுவெல பகுதியில் அமைந்துள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தின் மேல் மாடியில் வசித்து வந்த 35 வயதுடைய தந்தை, 30 வயதுடைய தாய் மற்றும் 2, 6 வயதுடைய இரண்டு பிஞ்சுக் குழந்தைகளே இத்துயரச் சம்பவத்தில் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தில் தீ பரவியதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டை தீயணைப்புப் பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும், தீயின் கோரத் தாண்டவத்தால் மேல் மாடியில் சிக்கியிருந்த நால்வரையும் உயிருடன் மீட்க முடியாமல் போனது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!