news@ilakkiyainfo.com

பிரிவுகள்

"தீவிரமடைந்த ‘பழிக்கு பழி’ தாக்குதல்... ஹோர்முஸை விட்டுத் தராத ஈரான் - ட்ரம்புக்கு என்ன சிக்கல்?

13 Jul, 2026


‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறிவிட்டது’ என்று சாடுகிறார் டொனால்டு ட்ரம்ப். ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்’ என்கிறது ஈரான். இதனால், மேற்கு ஆசியாவில் மீண்டும் அமைதி சீர்குலைந்திருக்கிறது.

ஈரான் நாட்டின் முன்னாள் உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உடல் மஷாத் நகரில் ஜூலை 9-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள், கமேனியின் புகைப்படங்களையும் ஈரான் கொடிகளையும் கைகளில் ஏந்தியவாறு கண்ணீர் மல்க கமேனிக்கு அஞ்சலி செலுத்தினர்.

<கடந்த ஜனவரியில் ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் தாக்கத்தை இப்போதும் அங்குக் காண முடிந்தது. முதலில் கமேனியின் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்த பலர், பின்னர் ஜூலை 9-ம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

துக்கம் அனுசரித்த ஆயிரக்கணக்கான மக்களால், டெஹ்ரானின் முக்கியச் சாலைகள் நிரம்பியிருந்ததை இறுதி ஊர்வலத்தின் வான்வழிக் காட்சிகளில் காண முடிந்தது. 

அங்குத் திரண்டிருந்தோர், இஸ்லாமியக் குடியரசின் வழக்கமான முழக்கங்களான ‘அமெரிக்காவுக்கு மரணம்‘, ‘இஸ்ரேலுக்கு மரணம்‘ என்ற முழக்கங்களை எழுப்பினர்.

அதே நேரம், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, 

அமெரிக்கா - ஈரான் இடையே பழிக்குப் பழி என்ற தாக்குதல்கள் தீவிரமடைந்தன. கடல்சார் உளவுத் தரவுகளை வழங்கும் 'கிப்ளர்' (Kpler) அமைப்பின் தகவலின்படி, ஓமன் வழித்தடத்தைப் பயன்படுத்தும் கப்பல்களின் போக்குவரத்து தற்போது முடங்கியுள்ளது.<

/கிப்ளரின் தரவுகள்படி, கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹோர்முஸ் நீரிணை வழியாக 23 எண்ணெய் டாங்கர்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மட்டுமே பயணித்தன.

 அதற்கு முந்தைய வாரத்தில் இதே நாளில் 47 கப்பல்கள் இந்த வழித்தடத்தைக் கடந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


உரிமை கோரும் ஈரான்!

உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகத்தில் கணிசமான அளவுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. 

உரங்களும், அத்தியாவசியப் பொருட்களும் அந்த வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றன. பல தசாப்தங்களாக, இந்த நீர்வழிப் பாதையில் கப்பல்கள் எந்தக் கட்டணமுமின்றி, தடையுமின்றி சுதந்திரமாகப் பயணித்துவந்தன.

\இந்த நிலையை மாற்றி, ஹோர்முஸ் நீரிணை மீது முழுமையான கட்டுப்பாட்டை நிறுவும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருவதாக அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் கருதுகின்றனர்.

 மோதலுக்கு முன்பு இருந்ததைப் போலவே ஹோர்முஸ் நீரிணை சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்குத் தடையின்றி திறந்திருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்கிறது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து எந்தத் தடையும் இல்லாமல் சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பது அமெரிக்கா,  அதன் வளைகுடா கூட்டாளிகள், ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்துவருகிறது.

<அமெரிக்கா – ஈரான் இடையே, ஜூன் 17 அன்று கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பது தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

அதன்படி, தனது கடற்படை முற்றுகையை விலக்கவும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான சில தடைகளைத் தளர்த்தவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. 

இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து ஆரம்பத்தில் கணிசமாக அதிகரித்தது. ஜூன் 24 அன்று, அந்த வழியாகச் சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது

கப்பல்கள் மீது தாக்குதல்!


இந்த நிலையில், ஜூன் 25, 27 ஆகிய தேதிகளில் ஓமன் கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தாங்கள் அங்கீகரித்துள்ள கடல்வழிப் பாதைகளை மட்டுமே அனைத்து கப்பல்களும் பயன்படுத்த வேண்டும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. 

அதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆத்திரமடைந்தார்.\போர்நிறுத்த ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக மீறிவிட்டது’ என்று ஈரான் மீது டொனால்டு ட்ரம்ப் ஜூலை 6 அன்று குற்றம் சாட்டினார். 

இது குறித்து ‘ஓவல்’ அலுவலகத்தில் பேசிய அவர், \"நாம் ஓர் ஒப்பந்தத்தை எட்டலாம்; இல்லையெனில் வேலையை முடித்துவிடலாம். அந்த வேலையை முடிப்பது எங்களுக்குக் கடினமானது அல்ல. 

ஆனால், 9.1 கோடி மக்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பாததால், ஒப்பந்தம் எட்டப்படுவதையே விரும்புகிறேன்\" என்றார். மேலும், \"அவர்களின் பாலங்களை ஒரு மணி நேரத்துக்குள் எங்களால் அழிக்க முடியும். 

அவர்களின் எரிசக்தி விநியோகத்தை முழுமையாகத் துண்டிக்கவும் முடியும். தற்போது அவர்களிடம் பணம் இல்லை; நாங்கள் அவர்களுக்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை\" என்றும் ட்ரம்ப் கோபத்துடன் கூறினார்.

இதனையடுத்து, ஹோர்முஸ் நீரிணை பகுதியிலுள்ள ஈரானிய ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

 அந்தத் தாக்குதல்கள், அதற்கு பத்து நாள்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைவிட, அளவிலும் தாக்கத்தின் வீரியத்திலும் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக இருந்ததாக அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருபோதும் பணிய மாட்டோம்!<


அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரான் தரப்பின் முதன்மை பேச்சுவார்த்தையாளரும், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃப்

 சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்தார். தனது எக்ஸ் தளப் பதிவில், "மிரட்டலும் அச்சுறுத்தலும் நிறைந்த காலம் முடிந்துவிட்டது.

 இத்தகைய நடவடிக்கைகள் எந்தப் பயனையும் அளிக்காது. நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் தகவலின்படி, ஏப்ரல் போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்கள் இவை.

 இந்த நடவடிக்கைகள், டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே பழிக்குப் பழி என்ற தாக்குதல்கள் மீண்டும் தொடருவதற்கான அபாயத்தை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு \"பதிலடி\" அல்லது \"தண்டனை\" என்ற வகையிலேயே அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகப் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஈரான், தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டியது. மேலும், அந்தப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அறிவித்தது. 

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஓமன் கடல் வழித்தடத்தைப் பயன்படுத்திய கப்பல்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. பின்னர், கப்பல் போக்குவரத்து ஓரளவு மீண்டாலும், மோதலுக்கு முந்தைய அளவை எட்டவில்லை.

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சி!


இதற்கிடையில், ஜூலை 8-ம் தேதி, நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் கையெழுத்திடப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என்று தெரிவித்தார். 

மேலும், டெஹ்ரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.\அப்போது ட்ரம்ப், "அவர்கள் அயோக்கியர்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். 

அவர்களை வழிநடத்துபவர்களும் அதே போலத்தான். அவர்கள் கொடூரமானவர்கள், வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால், அதைப் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரம் முடிந்துவிட்டது\" என்று தெரிவித்தார்.

இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் உயர்மட்ட அதிகாரிகள், அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தையை தொலைபேசி வாயிலாக நடத்தினர் என்று மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹோர்முஸ் நீரிணை தனது மிக முக்கியமான மூலோபாயச் சொத்து என்று ஈரான் கருதுகிறது. அதே வேளையில், அது ஈரானுக்கே மிகப் பெரிய பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் மாறியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து, ஈரானியப் படைகள் ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதித்தும், வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டும், அந்த வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை சுமார் 95 சதவிகிதம் வரை குறைத்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

 இதன் விளைவாக, சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் ஃபாத்திஹ் பிரோல், ‘உலக எண்ணெய் சந்தை வரலாற்றிலேயே மிகப் பெரிய விநியோகத் தடை இது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்

.இந்த நடவடிக்கைகளால் பிற நாடுகளின் பொருளாதாரம் மட்டுமின்றி,  ஈரானின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

சர்வதேசச் சந்தை விலையைவிட ஒரு பீப்பாய்க்கு சுமார் 3 அமெரிக்க டாலர் குறைவாக விற்கப்பட்டு வந்த ஈரானிய கச்சா எண்ணெய், தற்போது சுமார் 20 சதவிகித தள்ளுபடியில் விற்கப்படுகிறது. 


மேலும், அமெரிக்கக் கடற்படையின் கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகள் ஈரானின் ‘நிழல் கப்பற்படை’ செயல்பாடுகளை முடக்கியதன் விளைவாக, மே மாதத்தில் அந்த நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி 90 சதவிகிதத்திற்கும் மேல் சரிந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

போர் தொடங்குவதற்கு முன்பே, 2026-ம் ஆண்டில் ஈரானின் பொருளாதாரம் சுருங்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது. 

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் குறைந்திருப்பது, அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


ஐ.ஆர்.ஜி.சி அறிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜூன் 17 அன்று கையெழுத்தான ஒப்பந்தம், அடுத்த 60 நாட்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் எந்தவிதக் கட்டணமும் இன்றி பாதுகாப்பாகப் பயணிப்பதை உறுதி செய்ய, தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஈரானை வலியுறுத்தியது

.மேலும், ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால நிர்வாகம், கடல்சார் சேவைகள் தொடர்பான கட்டமைப்பை வரையறுப்பதற்காக, ஓமன் சுல்தானகத்துடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவுகள், ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் தங்களுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டிருப்பதாக ஈரான் கூறியிருக்கிறது.

 அதே நேரத்தில், நீண்டகால அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் எந்தத் தெளிவான உறுதிமொழியையும் ஈரான் வழங்கவில்லை.

இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC), தனது செய்தி நிறுவனத்தின் மூலம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தக் கடல் பகுதியிலோ, அல்லது ஹோர்முஸ் நீரிணையிலோ எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியும் உரிமை கோர முடியாது\" என்று தெரிவித்தது. 

மேலும், "கப்பல் போக்குவரத்துப் பாதைகளை நிர்ணயிப்பதில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடும், கடுமையான பதிலடிக்கு ஆளாகும். 

அதே சமயம், நீரிணையைப் படிப்படியாக மீண்டும் திறக்கும் செயல் முறையையும் அது கடுமையாகப் பாதிக்கும்\" என்றும் ஐ.ஆர்.ஜி.சி எச்சரித்திருக்கிறது.


ட்ரம்ப்புக்கு பெரும் சவால்!<


ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தக் கருவியாக ஈரான் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில்தான், அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சில பொருளாதாரச் சலுகைகளை அமெரிக்கா வழங்கியது. 

ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதுதான், டொனால்டு ட்ரம்ப்பின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது

.ஜூன் 22 அன்று, அமெரிக்கக் கருவூலத் துறை வழங்கிய 60 நாள் விலக்கு மூலம், ஆகஸ்ட் 21 வரை ஈரான் தனது கச்சா எண்ணெய்யைச் சர்வதேசச் சந்தை விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. 

எனினும், சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்தச் சலுகையை அமெரிக்கா தற்போது ரத்து செய்துள்ளது.

பொருளாதாரச் சலுகைகள் வழங்கியதாலும், ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டதாலும், ஈரானின் அணுகுமுறையில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.

 எனவே, சலுகை, கண்டிப்பு ஆகிய இரு அணுகுமுறைகளுக்கும் இடையில் சரியான சமநிலையை உருவாக்கி, ஈரானின் செயல்பாட்டை மாற்றுவது என்பது அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!