news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தீவி­ர­மாகும் எரி­பொருள் நெருக்­கடி

19 Oct, 2026
எரி­சக்தி இன்று முக்­கி­ய­மா­ன­தொரு ஆயு­த­மாக மாற்­றப்­பட்­டுள்ள சூழலில், இலங்கை அர­சாங்கம் எரி­சக்தி நெருக்­க­டியை சமா­ளிப்­ப­தற்கு கடு­மை­யான சவால்­களை எதிர்­கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

ஈரான் மீதான அமெ­ரிக்­காவின் போர் மற்றும் பொரு­ளா­தாரத் தடைகள், அதன் விளை­வாக மத்­திய கிழக்கின் எரி­பொருள் விநி­யோக வழிகள் அடை­பட்டுப் போயி­ருப்­பது, ரஷ்ய எரி­பொருள் ஏற்­று­ம­திக்கு அமெ­ரிக்கா விதித்­துள்ள தடை போன்­ற­வற்றின் கார­ண­மாக உல­க­ளா­விய ரீதி­யாக எரி­சக்தி நெருக்­கடி தோன்­றி­யி­ருக்­கி­றது.

எரி­பொருள் விலைகள் தாறு­மா­றாக அதி­க­ரித்து, உலக நாடு­களின் பொரு­ளா­தா­ரங்கள் நெருக்­க­டிக்குள் சிக்­கி­யி­ருக்­கின்­றன. இந்த நெருக்­கடி இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­தையும் அசைத்துப் பார்க்ஸ்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் அதற்கு முந்­திய கொவிட் தொற்று, அதற்குப் பின்­ன­ரான ஆட்சி மாற்ற நெருக்­கடி என அடுத்­த­டுத்த சவால்­களை இலங்கை சந்­தித்­தது.

இதனால் சரிந்து போன பொரு­ளா­தா­ரத்தை, அடி­மட்­டத்தில் இருந்து கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய நிலையில், எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு, தட்­டுப்­பாடு, விநி­யோ­கத்தில் ஏற்­பட்­டுள்ள சிக்கல் போன்­றன,   இன்­னொரு எரி­பொருள் நெருக்­க­டியை உரு­வாக்­குமா என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

2022 ஆம் ஆண்டு, கோட்­டா­பய ராஜ பக் ஷவின் அர­சாங்­கத்­தினால்,  டொலர் இருந்தால் தேவை­யா­ன­ளவு எரி­பொ­ருளைக் கொள்­வ­னவு செய்யக் கூடிய நிலை இருந்­தது.

கொழும்பு துறை­மு­கத்­திற்கு வெளியே எரி­பொருள் ஏற்­றி­வந்த கப்பல் கண்­ணுக்கு எட்­டிய தூரத்தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், அதனை தரை­யி­றக்கி விநி­யோ­கிப்­ப­தற்கு தேவை­யான டொலர் கையி­ருப்பில் இருக்­க­வில்லை.

அதனால் கோட்­டா­பய ராஜ­பக் ஷ அர­சாங்கம் வர­லாற்றில் எப்­போதும் இல்­லாத நெருக்­க­டியை எதிர்­கொண்­டது. எரி­பொ­ரு­ளுக்­காக மக்கள் வீதி வீதி­யாக இரவு பக­லாக காத்­தி­ருந்­தனர்.

அந்த நிலைமை ஆட்சி மாற்­றத்­துக்­கான போராட்­டங்­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யது. இப்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்ற எரி­பொருள் நெருக்­கடி மற்றும் விநி­யோக குழப்­பங்கள் என்­பன, அது­போன்ற சூழலை ஏற்­ப­டுத்தி விடக்­கூ­டாது என்ற அச்­சத்தில் அர­சாங்கம் இருக்­கி­றது.

அத்­த­கைய நிலையைத் தவிர்க்க அர­சாங்கம் கடு­மை­யான முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளது.

இலங்­கையின் எரி­பொருள் விநி­யோகம் முன்னர் முற்­று­மு­ழு­தாக இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் கட்­டுப்­பாட்­டி­லேயே இருந்­தது.

பின்னர், இந்­தி­யாவின் ஐ.ஓ.சி. நிறு­வ­னமும், அதனைத் தொடர்ந்து,  சீனாவின் சினோபெக் நிறு­வ­னமும் அமெ­ரிக்­காவின் ஆர்.எம். பார்க்ஸ் நிறு­வ­னமும் எரி­பொருள் விநி­யோகச் சந்­தையில் நுழைந்­தன.

அவுஸ்­ரே­லி­யாவின் யுனைட்டெட் பெற்­றோ­லியம் நிறு­வனம், 2024 ஆம் ஆண்டு இலங்­கையின் எரி­பொருள் விநி­யோக சந்­தையில் நுழைந்த போதும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே,   64 எரி­பொருள் விற்­பனை நிலை­யங்­க­ளையும் மூடி­விட்டு, வெளி­யேறி விட்­டது.

இப்­போது சீனாவின் சினோபெக், இந்­தி­யாவின் லங்கா ஐ.ஓ.சி., அமெ­ரிக்­காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய மூன்று நிறு­வ­னங்­களும், இலங்­கையின் சில்­லறை விநி­யோக சந்­தையில் இருக்­கின்­றன.

இலங்­கையில் தற்­போது 1,440 எரி­பொருள் நிலை­யங்கள் இயங்கும் நிலையில், அவற்றில் 553 எரி­பொருள் விநி­யோக நிலை­யங்­களை வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் கையில் வைத்­தி­ருக்­கின்­றன.

லங்கா ஐ.ஓ.சி.  273 எரி­பொருள் நிலை­யங்­க­ளையும்,  சினோபெக் 150 எரி­பொருள் நிலை­யங்­க­ளையும், ஆர்.எம். பார்க்ஸ் 130 எரி­பொருள் நிலை­யங்­க­ளையும் கொண்­டி­ருக்கும் நிலையில்,  887 எரி­பொருள் நிலை­யங்கள் பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­திடம் உள்­ளன.

38 சத­வீ­த­மான எரி­பொருள் விநி­யோ­கத்தை வெளி­நாட்டு நிறு­வ­னங்­களும் 62 வீத­மான எரி­பொருள் விநி­யோ­கத்தை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னமும் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த நிலையில்,  வெளி­நாட்டு எரி­பொருள் விநி­யோக நிறு­வ­னங்­க­ளுக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடையே முரண்­பாடு முற்­றி­யி­ருக்­கி­றது.

அதற்குப் பிர­தான காரணம், சர்­வ­தேச சந்­தையில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் விலை அதி­க­ரிப்­பே­யாகும்.

சர்­வ­தேச சந்­தையில் மசகு எண்ணெய் விலை அதி­க­ரித்­துள்­ளதால், தனியார் நிறு­வ­னங்கள் டீசல் விலையை லீற்­ற­ருக்கு 116 ரூபா முதல்,  132 ரூபா வரை அதி­க­ரிக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­தின.

ஆனால், இலங்கை அரசு அதனை ஏற்­க­வில்லை. இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம்  10 ரூபா மட்­டுமே விலையை உயர்த்­தி­ய­துடன் 70 ரூபா மானி­யத்­தையும் வழங்­கி­யது.

இதனால் தங்­க­ளுக்கு நட்டம் ஏற்­ப­டு­வ­தாகக் கூறி, வெளி­நாட்டு நிறு­வ­னங்கள் தங்­களின் எரி­பொருள் விநி­யோ­கத்தை கணி­ச­மாகக் குறைத்துக் கொண்­டன.

லங்கா ஐ.ஓ.சி. 45 சத­வீ­தமும், சினோபெக் 66 சத­வீ­தமும் டீசல் விநி­யோ­கத்தைக் குறைத்­தன.

இதனால் நாடு முழு­வதும் உள்ள,  தனியார் எரி­பொருள் நிலை­யங்­களில் பற்­றாக்­குறை ஏற்­பட்டு, வாக­னங்கள் வரி­சை­களில் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது தனியார் நிறு­வ­னங்கள்  போதிய இருப்பு இருந்தும் எரி­பொ­ருளை விநி­யோகம் செய்­ய­வில்லை என்றும், உடன்­பாட்­டின்­படி பரா­ம­ரிக்க வேண்­டிய குறைந்­த­பட்ச எரி­பொருள் இருப்பை பேண­வில்லை என்றும் அர­சாங்கம் குற்­றம்­சாட்­டு­கி­றது.

அதே­வேளை, எரி­பொ­ருளை அதிக விலைக்கு விற்கத் தடை­யில்லை என்றும், ஆனால், பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம், விலையை உயர்த்­தாது என்றும் அர­சாங்கம் கூறு­கி­றது.

பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் விலையை உயர்த்­தாமல்,  டீசல் விலையை அதி­க­ரிக்க இந்த நிறு­வ­னங்கள் தயங்­கு­கின்­றன.

இந்த நிலையில், முந்­தைய அர­சாங்­கங்கள் கையெ­ழுத்­திட்ட உடன்­பா­டு­க­ளின்­படி, எரி­பொருள் நிறு­வ­னங்கள் விநி­யோ­கத்தைக் குறைத்தால் அர­சாங்கம் தலை­யி­டு­வ­தற்­கான வலு­வான விதிகள் இல்லை என்­பதால், இந்த உடன்­பா­டு­களை திருத்தப் போவ­தாக ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க அறி­வித்­துள்ளார்.

சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­யையும் அர­சாங்கம் கோரி­யுள்­ளது

அதே­வேளை, தனியார் நிறு­வ­னங்­களின் விநி­யோகக் குறைப்பைச் சமா­ளிக்க, பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம், தனது சந்தைப் பங்­க­ளிப்பை 55 வீதத்தில் இருந்து  80 வீத­மாக உயர்த்­தி­யுள்­ளது.

அத்­துடன், தனியார் நிறு­வ­னங்­களின் ஏக­போ­கத்தைக் குறைக்க, நாடு முழு­வதும் புதி­தாக 75 புதிய எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களை அமைக்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

அவர்­களால்  23 சத­வீத சந்தை தேவையை விநி­யோ­கிக்க முடி­யா­விட்டால், நாமே­அதை முழு­மை­யாகச் செய்வோம் என ஜனா­தி­பதி எச்­ச­ரித்­துள்ளார்.

அதே­வேளை, சர்­வ­தேச சந்­தையில் எண்ணெய் விலை அதி­க­ரிப்­பினால், ஒரு லீற்றர் டீச­லுக்கு 192 ரூபாவும், பெற்­றோ­லுக்கு 67 ரூபாவும் நட்டம் ஏற்­ப­டு­வ­தாக சினோபெக் கூறு­கி­றது. டீச­லுக்கு 173 ரூபாவும், பெற்­றோ­லுக்கு, 38.75 ரூபாவும் இழப்பு ஏற்­ப­டு­வ­தாக ஆர்.எம். பார்க்ஸ் நிறு­வ­னமும்,  டீச­லுக்கு  136 ரூபாவும், பெற்­றோ­லுக்கு  57 ரூபாவும் நட்டம் ஏற்­ப­டு­வ­தாக லங்கா ஐ.ஓ.சி. நிறு­வ­னமும் கூறு­கின்­றன.

இத­னா­லேயே டீசலின் விலையை 116 முதல் 132 ரூபா வரை உயர்த்த அனு­மதி கோரின.

ஆனால், அர­சாங்கம், அதற்கு இணங்­க­வில்லை.

இதனால் எண்ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையே முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் நிறு­வ­னங்­க­ளு­ட­னான இந்த முரண்­பாடு, இந்த நாடு­களின் அர­சாங்­கங்­க­ளு­ட­னான உற­வு­க­ளுக்கும் சவால் தான். இது பெரி­ய­ள­வி­லான இரா­ஜ­தந்­திர அல்­லது அர­சியல் மோதலை ஏற்­ப­டுத்த வாய்ப்­பில்லை என்று கூறப்­பட்­டாலும், அதனை இல­கு­வாக எடுத்துக் கொள்ள முடி­யாது.

கோட்­டா­பய ராஜ­பக் ஷவின் காலத்தில், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட இயற்கை உரம் தர­மற்­றது எனத் திருப்பி அனுப்­பப்­பட்­ட­போது,  அதற்­கான கொடுப்­ப­னவைச் செலுத்­து­மாறு சீனா அழுத்தம் கொடுத்­தது.

அந்த நெருக்­க­டி­யான தரு­ணத்­திலும் 6 மில்­லியன் டொலர் வரை­யான வெளி­நாட்டு நாணயம் வெளியே செல்­வ­தற்கு சீன அர­சாங்கம் கார­ண­மாக இருந்­தது.

இலங்­கையில் முத­லீட்­டுக்கு உகந்த சூழல் இல்லை என்று அமெ­ரிக்கா தொடர்ச்­சி­யாக குறை கூறி வரு­கி­றது. இவ்­வா­றான நிலையில், அமெ­ரிக்க நிறு­வ­னத்­திற்கு கொடுக்­கப்­படும் அழுத்­தங்­களை அமெ­ரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருக்­குமா என்­பது சந்­தேகம். அது­போல இந்­தி­யாவும் அமை­தி­யாக இருக்கும் எனக் கூற முடி­யாது.

ஏனென்றால், இலங்­கைக்கு கடும் நெருக்­கடி  ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில், லங்கா ஐ.ஓ.சி. நிறு­வனம் மூலம், காப்­பாற்­றி­யது இந்­தியா.

இந்த விவ­காரம் இந்த நாடு­களின் அர­சாங்­கங்­க­ளு­ட­னான பிரச்­சினை உரு­வெ­டுக்­காது போனாலும், இலங்­கையின் மீதான அழுத்­தங்­களை அதி­க­ரிக்கச் செய்யும். இது வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு கவ­லை­யையும், அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்தக் கூடும். பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீண்டு வரும் வேளையில், ஏற்­க­னவே செய்து கொள்­ளப்­பட்ட சர்­வ­தேச உடன்­பா­டு­களை திருத்தப் போவ­தாக அர­சாங்கம் கூறு­வது, முத­லீட்டுச் சூழலில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும்.

வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் ஒரு நாட்டில் முத­லீடு செய்யும் போது, அர­சாங்கக் கொள்­கை­களின் நிலை­யான தன்­மை­யையே எதிர்­பார்ப்­பார்கள்.

ஆட்சி மாற்றம் ஏற்­படும் போது முந்­தைய அர­சாங்­கங்­களின் உடன்­பா­டுகள் திருத்­தப்­பட்டால், அது தங்­களின் முத­லீட்டுப் பாது­காப்­பிற்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என்ற அச்­சத்தை உரு­வாக்கும். அத்­த­கை­ய­தொரு சூழ­லுக்குள் இலங்கை சிக்கியிருக்கிறது.

அவுஸ்ரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறிய போது, அரசாங்கத்துடனான உடன்பாடுகளை செயல்படுத்து வதில் ஏற்பட்ட தாமதங்கள், உறுதியற்ற கொள்கை போன்றவற்றை காரணமாக குறிப்பிட்டிருந்தது.

அதுபோல, ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒரு உடன்பாட் டின்படி, அம்பாந்தோட்டையில், 3.7 பில்லியன் டொலர் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவ சினோபெக் நிறுவனம் முன்வந்தது.

ஆனால், உள்ளூர் விநியோக சந்தையில், அதிகளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அந்த நிறுவனம் கோரியதாலும், அரசாங்கத்தின் இறுக்கமான போக்கினாலும், சீன நிறுவனத்தின் முதலீட்டு திட்டம் தொங்கு நிலையில் இருக்கிறது.

எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் இந்திய, அமெரிக்க, சீன நிறுவனங்கள் இதுபோன்றதொரு உறுதியற்ற- முதலீட்டுப் பாதுகாப்பற்ற சூழலுக்குள் தள்ளப்பட்டால், அது இலங்கையின் எரிபொருள் சந்தையில் பெரும் குழப்பத்தை உருவாக்கி விடும்.அத்தகையதொரு போக்கே தற்போது வெளிப்படுகிறது.

(சத்­ரியன்)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!