news@ilakkiyainfo.com

பிரிவுகள்

துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலக உறுப்பினர் ‘கொண்ட ரஞ்சி

10 Sep, 2026
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID பொறுப்பேற்பு!

துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொண்ட ரஞ்சி’ எனப்படும் ரஞ்சித் குமார குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (09) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே அங்கு தயாராகவிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் சம்பந்தமாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபரான இவர் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் ஏற்கனவே இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் துபாய் அதிகாரிகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த நிலையில், அவர் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!