news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தெனியாயவில் மூளைக்காய்ச்சல் அச்சம்: 4 முக்கிய பாடசாலைகள் நாளை வரை மூடல் - மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

11 May, 2026

தெனியாய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நான்கு பிரதான பாடசாலைகளை மேலும் இரண்டு நாட்களுக்கு (இன்றும் நாளையும) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலய கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். இந்தப் பரவல் Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் எனச் சுகாதாரத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 7 மற்றும் 8-ம் திகதிகளில் மூடப்பட்டிருந்த தெனியாய மத்திய கல்லூரி, ராஜபக்ச மகா வித்தியாலயம், புனித மத்தேயு இரு மொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவையே தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறிகளுடன் பல மாணவர்கள் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகமும் கல்வி அதிகாரிகளும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். பிள்ளைகளுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், காலம் தாழ்த்தாது உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்விச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறையினரின் தொடர் ஆலோசனையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!