தெற்கு மெக்சிகோவில் மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இத ரிக்டரில் 7.3 ஆக பதிவானது. இதனைடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
மெக்சிகோவின் சியபாஸின் கடற்கரை அருகே பூமியில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ரிக்டரில் 7.4 என பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு 7.3 என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 5.2, 4.5 மற்றும் 6.1 என அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது. கட்டடங்கள் குழுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடற்கரையோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!