தெலுங்கானாவில் அதிர்ச்சி: சக மாணவிக்கு கட்டாயமாக மது புகட்டி அத்துமீறிய பொறியியல் கல்லூரி மாணவன் கைது!
இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் சக மாணவியை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து அவரிடம் அத்துமீறிய பொறியியல் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம் சவுட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14ஆம் திகதி, தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரை டீ அருந்துவதற்காக தனது காரில் (சிற்றூந்தில்) அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து இப்ராஹிம்பட்டினத்திற்குத் திரும்பிய போது, வழியிலுள்ள ஒரு மது விற்பனை நிலையத்தில் மதுபானங்களை வாங்கிய மாணவன், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு அந்த மாணவியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததுடன், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் (புகார்) அடிப்படையில், காவல்துறையினரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!