தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர், மீ்ண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் இருப்பினும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, ஈரானுக்கு எதிராக அடுத்த கட்ட தாக்குதலை நடத்தத் தயாராகுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ட்ரம்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாளை (நவ. 3) அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஈரானுடனான போர் நடவடிக்கைகள் தொடர்பாக நெதன்யாகு ட்ரம்புடன் தொலைப்பேசியில் உரையாடியதாகவும், இருவரும் பேசிக்கொண்டபோது, அமெரிக்க தேர்தல் நடந்து முடிந்தவுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆரம்பிக்குமாறு ட்ரம்புக்கு நெதன்யாகு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நெதன்யாகு ட்ரம்பிடம் ஈரானுடனான தாக்குதல் தொடர்பில் ஆலோசனை வழங்கியபோதும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மோதலை சுமூகமாக தீர்க்க ட்ரம்ப் முயற்சிப்பதாகவும் சர்வதேச மட்டத்தில் கருத்துக்கள் உலாவுவதாகவும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!