கத்திரிக்கோல் ஒன்று காணாமல்போனதால் 20 விமானச் சேவைகள் ஒத்திவைக்கப்பட்டன அல்லது ரத்துச் செய்யப்பட்டன. இந்த சம்பவம், ஜப்பானின் ஒகினாவா (Okinawa) விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தின் பாதுகாப்புமிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது கத்திரிக்கோலைத் தொலைத்துவிட்டதாகச் சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தின் சில பாதுகாப்புச் சோதனை முனையங்கள் உடனடியாக மூடப்பட்டதாக 'கியோடோ நியூஸ்' செய்தி வெளியிட்டது.
சுமார் இரண்டு மணி நேரத் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, குறித்த கத்திரிக்கோல் துப்புரவு நிறுவனத்தின் அலுவலகத்திலேயே கண்டெடுக்கப்பட்டது.
கத்திரிக்கோல் கண்டெடுக்கப்பட்ட பின்னரே, மூடப்பட்ட பாதுகாப்புச் சோதனை முனையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!