news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நண்பனின் மகனை வன்புணர்ந்த: 45 வயது நபருக்கு கடூழியச் சிறை

26 Nov, 2026
பாடசாலைக் கால நண்பனின் வீட்டிற்குச் சென்று, அவரது 11 வயது ஆண் குழந்தையைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட 45 வயதுப் பிரதிவாதிக்கு, குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

  குறித்த பிரதிவாதிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார். குறித்த நட்டஈட்டையும் அபராதத்தையும் செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக ஒன்றரை வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி லால் ரணசிங்க பண்டார மேலும் உத்தரவிட்டார்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில், குறித்த பிரதிவாதி பாதிக்கப்பட்ட சிறுவனின் அந்தரங்க உறுப்பைத் தொட்டுத் துஷ்பிரயோகம் செய்தமை சாட்சி விசாரணையின் போது அம்பலமாகியிருந்தது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!