news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நள்ளிரவில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டல்...

15 May, 2026

இரத்தினபுரி, குருவிட்ட - வெலிஹிந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து, கூரிய ஆயுதங்களைக் காட்டி வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி இரத்தினக்கற்கள் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 12-ம் திகதி கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சுற்றிவளைப்பின் போது இச்சந்தேக நபர் சிக்கியுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பெறுமதியான இரத்தினக்கற்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் மே மாதம் 25-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து இரத்தினபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!