news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

02 Nov, 2026
1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர்ந்த ஏனைய அனைத்து எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

திருத்தத்தின்படி, லங்கா டீசல் லீற்றரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 543 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி, அதன் புதிய விலை லீற்றருக்கு 285 ரூபாவாகவே தொடரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!