news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நவம்பர் 01 முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

28 Sep, 2026
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 01, 2026 முதல் குறிப்பிட்ட முக்கிய நிதி, நிர்வாக மற்றும் சொத்து தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்க (TIN) சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, 2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்த குடியிருப்பாளர்கள் அல்லது 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் 18 வயதை அடையும் குடியிருப்பாளர்கள், அந்த வயதை அடைந்தவுடன் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல் TIN சான்றிதழ் தேவைப்படும் நடவடிக்கைகள்:

🔹 எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் கணக்கு ஆரம்பித்தல்
🔹 கட்டடத் திட்டத்திற்கான அனுமதி பெறுதல்
🔹 மோட்டார் வாகனம் பதிவு செய்தல்
🔹 மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல்
🔹 காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்
🔹 வணிகத்தைப் பதிவு செய்தல்
🔹 இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை மாற்றுதல்
🔹 கடன் அட்டை (Credit Card) பெறுதல்

குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செல்லுபடியாகும் TIN சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பரிவர்த்தனையை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TIN இலக்கம் இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் e-Services ஊடாக விண்ணப்பிக்க முடியும். திணைக்களத்தின் e-Services தளத்தில் TIN தொடர்பான பதிவுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், TIN சான்றிதழை வைத்திருப்பதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அதன் பிரதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

TIN சரிபார்ப்பின் பின்னர் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும் TIN தெளிவாகக் காண்பிக்கப்படும் சரிபார்ப்பு முடிவின் அச்சுப் பிரதியும், குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீங்கள் இதுவரை TIN இலக்கத்தினைப் பெறவில்லை என்றால், TIN இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளவும்.

TIN இலக்கத்திற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்! 💻📄
https://eservices.ird.gov.lk/Registration/verifyirdinformation/index

உங்கள் TIN இலக்கத்தை இணையவழியில் சரிபார்க்கலாம்! 🔎📄
https://eservices.ird.gov.lk/Registration/verifyirdinformation/index

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!