news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

26 Nov, 2026
அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது இதுவரை தெரியவரவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பான மேலதிக விபரங்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!