news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நிதி மோசடி குற்றச்சாட்டில் தனியார் நிறுவனங்களின் இரு பணிப்பாளர்கள் கைது!

21 Nov, 2026
சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாக உறுதியளித்துப் பணத்தைத் திரட்டி, அந்நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவர் நேற்று வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின்  நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த இரு நிறுவனங்களினதும் மூன்று பணிப்பாளர்களில் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் கொஹுவல ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள இவ்விரு நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதி மோசடியின் பெறுமதி சுமார் 4 பில்லியன் ரூபா என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக இதுவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று சனிக்கிழமை (21) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!