கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கடும்மழை கொட்டி தீர்த்து வருகிறது இன்று (25) வெள்ளிக்கிழமை காலை முதல் இடைவிடாது கடும் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கடந்த 20ஆம் திகதி முதல் இடை விடாது கொட்டி தீர்க்கும் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையினால், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகர், ஹாவா-எலிய, கந்தப்பளை, நானுஓயா, டெஸ்போட், ரதல்ல குருக்கு வீதி மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் இன்றையதினம் அதிகாலை முதல் நிலவும் இந்த மாறுபட்ட வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் குளிரும் நிலவி வருகிறது.
அடர்ந்த பனிமூட்டத்தினால் வீதிகளில் எதிரே வரும் வாகனங்களை அவதானிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனங்களின் வேகத்தைக் குறைத்துச் செலுத்த வேண்டும் எனவும், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுப் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன் செல்லும் வாகனங்களுக்கும் தமக்கும் இடையில் போதிய இடைவெளியைப் பேணுதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வாகனப் போக்குவரத்து நிலவும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - அட்டன் மற்றும் நுவரெலியா - கண்டி ஆகிய பிரதான வீதிகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீரேந்து பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சியினால் அணைக்கட்டுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் லக்ஷ பான மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங் களின் வான் கதவுகள் அடிக்கடி திறக்கப்படு வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக் கத்தில் அடிக்கடி அணைக்கட்டுக்கு மேலாக நீர் வழிந்தோடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மண் திட்டுகளுக்கு அருகாமை யில் வசிப்ப வர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது.
அட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகிய போதிலும் மழை நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் மிக அவதானத் துடன் வாகனங்களை செலுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட் டுக்கொண்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!