news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நேபாளத்தில் இராட்சத வெள்ளம் : 538 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

30 Aug, 2026
நேபாளத்தில் ஏற்பட்ட இராட்சத வெள்ளப்பெருக்கு நிலைமையில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 538 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

மேலும், காணாமற்போனவர்களின் எண்ணிக்கையைப் புதுப்பித்துள்ள அந்த அமைப்பு, 517 வெளிநாட்டவர்கள் உட்பட 977 பேர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளது.

புதன்கிழமை (26) ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 என நேபாள பொலிஸ் உறுதிப்படுத்தியிருந்தது.

மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வரும் சந்தர்ப்பத்தில், இந்த இரண்டு அமைப்புகளும் தனித்தனியாகப் புதிய விபரங்களை வழங்கி வருகின்றன. 

அதன்படி, தற்போது நேபாளத்தின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை 538 உடல்களை இதுவரை கண்டுபிடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!