news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பனை மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு!

04 Sep, 2026
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் நேற்று (04) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதியே விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!