news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பயணிகள் பஸ் மீது தாக்குதல் 33 உக்ரைனியர்கள் மரணம்

09 Oct, 2026
ழக்கு உக்ரைனில் ரஷ்யா நேற்று நடத்திய தாக்குதல்களால் இரண்டு பொதுப் பயணிகள் பஸ் வண்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிரமடோர்ஸ்க் நகரில் நடந்த இந்தத் தாக்குதல்களில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள அதிகாரிகள் பொதுப் போக்குவரத்து சேவையை நிறுத்தி, மக்களை நாட்டின் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் தங்கியிருக்கும் அனைவரும் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறேன். ரஷ்யர்கள் வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைக்கிறார்கள் என்று டொனெட்ஸ்க் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் வதிம் ஃபிலாஷ்கின் கூறினார்.

உக்ரைனின் அரச அவசரகால சேவை, ரஷ்யத் தாக்குதலால் இரண்டு பஸ்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீ ஏற்பட்டது. உயிர் பிழைத்தவர்களுக்கு உதவவும், தீயை அணைக்கவும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும் அவர்கள் கூறினர்.

கிரமடோர்ஸ்க், ஸ்லோவியான்ஸ்க் ஆகிய இரண்டும் போர்முனைக்கு அருகிலுள்ள முக்கியமான கைத்தொழில்துறை நகரங்களாகும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!