news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பலுசிஸ்தான் போராளிகள் குழுவின் “ஒபரேஷன் அல்மாஸ்” : இதுவரை 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

28 Oct, 2026
பாகிஸ்தான் மீது பலுசிஸ்தான் போராளிகள் குழு “ஒபரேஷன் அல்மாஸ்” என்ற பெயரில் தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பலுசிஸ்தான் போராளிகள் குழு ஊடகப் பேச்சாளர் மேஜர் குவாஹ்ராம் பலோச் தகவல் வெளியிட்டுள்ளார். 

பாகிஸ்தானில் உள்ள மிகப் பெரிய மாகாணமான பலுசிஸ்தான், தனி நாடு கோரி பல ஆண்டுகளாக தமது போராளிகள் குழுவைக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறது. அவ்வப்போது பாகிஸ்தான் பிரதான பகுதிகளில் இந்த போராளிக் குழு தாக்குதல்களை நடத்தியும் வந்துள்ளது. இந்த தாக்குதலை அக்குழு, தற்போது “ஒபரேஷன் அல்மாஸ்” என்கின்றனர்.

இது தொடர்பாக அதன் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், 

ஒபரேஷன் அல்மாஸ், கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பெயரில் பாகிஸ்தான் இராணுவ தளங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் தாக்குதலில் 12 இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டு, 2 பொலிஸ் நிலையங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!