news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பஸ் – டிப்பர் விபத்தில் ஐவரின் நிலை க​வலைக்கிடம்

27 Nov, 2026
பயணிகள் பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி – அவிசாவளை வீதியில், அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த பஸ்ஸும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் இரத்தினபுரியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) காலை நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 16 பேரும் சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய 11 பேரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!