news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பாதாள உலகக் குழுவுக்கு T-56 துப்பாக்கி வழங்கியவர் துபாயில் மடக்கிப் பிடிப்பு

26 Nov, 2026
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு, பொலிஸ் வீதித்தடையில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது தனது கடமை நேர T-56 ரக துப்பாக்கியைத் திருடி, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர்களிடம் ஒப்படைத்துவிட்டு துபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த ஜயக்கொடி ஆராச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயக்கொடி என்பவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினரும், ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினரும் துபாய்க்குச் சென்று சந்தேகநபரைக் கைது செய்து, நவம்பர் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இவர் அனுராதபுரம், பேமடுவ, ஹெலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். இவர் நவம்பர் 26 ஆம் திகதி அதிகாலை 05.20 மணிக்கு துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!