சின்னத்திரையில் முன்னணித் தொகுப்பாளினியாகப் பிரபலமடைந்து, தற்போது 'விக்ரம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகையாக வலம் வரும் விஜே மகேஸ்வரி, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பால் குளியல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2005ஆம் ஆண்டு திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, தற்போது சிங்கிள் மதராகத் தனது மகனை வளர்த்து வருகிறார். திரைத்துறை மற்றும் வாழ்க்கை முறையில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர், சமூக வலைதளங்களிலும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்.
அந்த வகையில், சென்னையில் உள்ள ஒரு ஆயுர்வேத மையத்தில் தான் பால் குளியல் (Milk bath) எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த அழகான பால் குளியல் மிகவும் உதவியாக இருந்தது" என அவர் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!