news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரான்சில் அதிர்ச்சி: பெட்டிகளில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

28 Jul, 2026
பிரான்சின் ஆராஞ்ச் (வோக்லூஸ் -Orange (Vaucluse), a) பகுதியில் வசித்த ஒரு தம்பதியரின் வீட்டில், உயிரிழந்த ஐந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக, செவ்வாய்க்கிழமை பல்வேறு நம்பகமான தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணைக்கு நெருக்கமான ஒரு தகவல் மூலத்தின் படி, அந்த வீட்டில் வசித்த பெண் திங்கள்கிழமை ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். 

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், அந்த தம்பதியரின் வீட்டில் பெட்டிகளுக்குள் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தொடர்பு கொண்டபோது, கார்பந்த்ரா அரசு வழக்கறிஞர் அலுவலகம் உடனடியாக எந்த தகவலையும் வெளியிட மறுத்துள்ளது.

இதற்கு முன்பு, பிப்ரவரி மாதத்தில், ஓத்-சோன் பகுதியில் ஒரு பெண்ணின் குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 50 வயதுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

பிறந்த உடனேயே குழந்தைகள் கொல்லப்படும் சம்பவங்கள் அரிதானவை அல்ல. இத்தகைய வழக்குகளில், சில நேரங்களில் தாயின் மனநிலை பாதிப்பு அல்லது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இருந்த கர்ப்பத்தை மறுக்கும் (கர்ப்ப மறுப்பு / pregnancy denial) மனநிலை போன்ற காரணிகள் இடம்பெற்றிருக்கலாம்.

பிரான்சில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைக் கொலை வழக்கில், டொமினிக் கொற்றெஸ் (Dominique Cottrez) என்பவர் எட்டு புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். 

2015 ஆம் ஆண்டு, அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது (பகுத்தறியும் திறன் குறைந்திருந்தது) என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!