news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலகல்

22 Jun, 2026
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று (22) திங்கட்கிழமை தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்குள் புதிய தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பிரித்தானியா காணப்போகும் 7 ஆவது பிரதமர் இவராவார்.

பிரித்தானிய அரசியலில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்து, பாரிய தேர்தல் வெற்றியொன்றைப் பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், தனது கட்சித் தரப்பினர் தான் பதவியிலிருந்து விலக வேண்டும் என விரும்புவது தெளிவாகத் தெரிவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பிரதமருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 09ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ள போதிலும், அவரது அரசியல் போட்டியாளரான ஆண்டி பர்ன்ஹாம் முன்னணியில் உள்ளார்.

இது குறித்து லண்டன் டவுனிங் வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கருத்து வெளியிட்ட பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்,

அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் தகுதியானவனா என்ற கேள்வியை எனது கட்சி எழுப்பியுள்ளது. பாராளுமன்றக் கட்சியின் அந்தப் பதிலைக் கேட்டுக்கொண்ட நான், அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

மேலும், புதிய தலைவரிடம் அதிகாரத்தை ஒழுங்கான முறையில் ஒப்படைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!