news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

24 Jul, 2026
வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள பல்லியவத்த, எலக்கட வீதி, இலக்கம் 258/8 இல் அமைந்துள்ள 'Vila by the edg' என்ற விழா மண்டபத்தில் வியாழக்கிழமை (23) இரவு 9:45 மணியளவில் பிறந்தநாள் விழாவின் போது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மட்டக்குளியை சேர்ந்த துப்பஹி ஆரச்சிகே பிரசாத் ருவான் என்ற குடு ரொஷானின் சீடனான வநாத முல்லே சுமேதா (39 வயது) என அறியப்படும் எச். மகேஷ் மதுசங்க என்பவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிறந்தநாள் விழா துப்பஹி ஆரச்சிகே ரந்தவ் (45 வயது) என்ற குடு ரொஷானின் சகோதரனின் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. கு

டு ரொஷானை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கருப்பு நிற காரில் வந்ததாக தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த கருப்பு நிற கார் ஜா-எல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஜா-எல பொலிஸார் இக்காரைக் கைப்பற்றியுள்ளனர். 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!