புத்தளம், சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கல்ல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (03) பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் கும்புக்கல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஆவார்.
கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, கணவரே இந்த கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து சந்தேகநபரான கணவன் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதோடு, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்காகச் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!