news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புத்தளம் - அனுராதபுரம் வீதியில் பஸ் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயம்!

17 Oct, 2026
கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு புத்தளம் – அனுராதபுரம் வீதியின் மீ ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 

மோசமான வானிலை காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ் விபத்தில் காயமடைந்தவர்களில்  7 பெண்கள்,  1 சிறுமி, 4 ஆண்கள் அடங்குவதோடு, அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்விபத்து தொடர்பாக புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!