news@ilakkiyainfo.com

பிரிவுகள்

புலிகள் என சந்தேகித்தவர்களையே செம்மணி பகுதியில் புதைத்தோம்

21 Nov, 2026
-சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாக சீ.ஐ.டி தெரிவிப்பு-


புலிகள் என சந்தேகித்த வர்களை செம்மணி பகுதி யில் புதைத்தோம். எனினும் அந்த இடங்களை தற்போது அடையாளம் காட்ட முடியாது எனவும், சித்துப்பாத்து எனும் பெயரே தனக்கு தெரியாது எனவும் சோமரத்தின தனது வாக்கு மூலத்தில் தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றையதினம் மன்றில் தெரிவித்தனர்.


செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடை யாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கானது யாழ்.நீதிவான் நீதிமன்றத் தில், நீதிவான் எஸ்.லெனின் குமார் தலைமையில் கடந்த ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கிருசரந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் முக்கிய குற்றவா ளியாகக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷக்ஷ்வின் வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள் வதற்கும், அவரிடம் இருந்து வாய் முறைப்பாட்டை பெறுவது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. 

இதற்கான அனுமதியை நீதிமன்றம் அன்றைய தினம் வழங்கியிருந்தது. இந் நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடலானது அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் நிபுணர்கள் குழுவுக்கும் சட்டத்தரணிகளுக்குமிடையில் நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம் பெற்றது.

இதன்போது பல்வேறு விடையங்கள் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் இராணுவ கோப்ரல் சோமரத்னராஜபக்ஷவின் வாக்குமூலம் தெரிவித்தாக தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் மன்றினால் வினாவப்பட்டது 

இதன்போது தாம் சிறைத் தண்டனை அனுபவித் துவரும் இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சோமரத்தின ராஜபக்ஷ தனது வாக்குமூலத்தில், தான் இராணுவசிப்பாயாக செம்மணியில் பணியாற்றிய காலத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தில் வேலிகள் அல்லது எல்லைகள் எதுவும் இல்லை எனவும், புலிகள் என சந்தே கித்தவர்களை செம்மணி பகுதியில் புதைத்தோம். 

எனினும் அந்த இடங்களை தற்போது அடையாளம் காட்டமுடியாது எனவும், சி.த்துப்பாத்தி எனும் பெயரே தனக்கு தெரியாது எனவும் எனினும் அந்த இடத்தில் தற்போது அகழ்வுப்பணிகள் இடம்பெறுவதாலேயே அந்த பெயர் தனக்கு தெரிந்திருப்பதாக, சோமரத்தின ராஜபக்ஷ தனது வாக்குமூலத்தில் தெரிவித்தாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித் தனர். 


இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தாணி எம்.ஏ.சுமந்திரன் தனது ஆட் சேபனையை முன்வைத்தார். அதாவது இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜக்க்ஷ் புதைக்கப்பட்ட இடங்களை அடை யாளம் காட்டமுடியும் என  அவர்  கைப்பட
எழுதிய கடிதங்களை அவரின் மனைவி ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார். 

இப்போது அவர் அடையாளம் காட்ட முடியாது என கூறியதாக சி.ஐ.டி. கூறுவது முரனானது என்றார். இது தொடர்பில் 

சட்டத்தரணி சு.சுகாஷ் தனது ஆட் சேபனையை முன்வைத்தார். அதாவது இராணுவ கோப் ரல் சோமரத்ன ராஜபக்ஷ, சில நிபந்தனைகளை முன்னர் வைத்திருந்தார். 

அந்த நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்திசெய்தாலே சில விடையங்களை கூறமுடியும் என தெரிவித்திருந்தார். எனினும் இப்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவர் அடையாளம் காட்ட முடியாது கூறியதாக கூறுவது வழக்கை திசை திருப்பும் செயல் என தனது சமர்பணத்தை முன்வைத்தார். 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!