களுத்துறை புளத்சிங்கள பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் வசித்து வந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகலோயா பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் குறித்த இருவரும் நேற்று 14) ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய எகலோயாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணும், அவரது கணவரான 65 வயதுடைய நபரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும் இணைந்தே அக்கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். அவர்களை பல நாட்களாக காணக்கிடைக்காத நிலையில், அயலவர்கள் அப்பகுதியில் உள்ள மற்றொரு கட்டடத்திலிருந்து பார்த்த போது குறித்த பெண் மேல் மாடியில் விழுந்து கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவலளித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் புளத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!