மட்டக்களப்பு பகுதியில் 9 வயது பெறாமகளை இரும்புக் கரண்டியால் சூடு வைத்து, வாயில் துணியைத் திணித்து அடித்துச் சித்திரவதை செய்த 25 வயதுடைய சித்திக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.
கடந்த 2015 மார்ச் 10ஆம் திகதி முதல் 2016 மார்ச் 10ஆம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதியில் இந்தச் சித்திரவதை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக 2016ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டு வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறுமிக்கு 25,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், சிறைத்தண்டனைகளை ஒரே காலப்பகுதியில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!