news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பேனா வடிவிலான கைத்துப்பாக்கி மீட்பு!

15 May, 2026

பேனா போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்ட நூதனமான கைத்துப்பாக்கியுடன் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 'மிடிகம சூட்டி' என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வெலிகம பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பேனா வடிவிலான துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த விசித்திரமான ஆயுதம் சந்தேகநபருக்கு எவ்வாறு கிடைத்தது? இதனைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளனவா? அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கு இந்த ஆயுதம் விநியோகிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!