news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பேருந்தில் பிஸ்கட் கொடுத்த மர்ம நபர்!

15 May, 2026

பேருந்து பயணங்களின் போது அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் உணவுப் பண்டங்களை உட்கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற அதிகாரி ஒருவர், இத்தகைய ஒரு கசப்பான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். பொரளையில் இருந்து இரவு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இவரிடம், அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் நயமாகப் பேசி பழகியுள்ளார்.

அந்த நபர் வழங்கிய பிஸ்கட்டைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குறித்த அதிகாரி மயக்கமடைந்துள்ளார். அதன் பின்னர் 5 நாட்கள் கழித்து கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவருக்குச் சுயநினைவு திரும்பியுள்ளது. அவர் மயக்கமடைந்திருந்த நிலையில், அவர் அணிந்திருந்த 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மோதிரம் மற்றும் பணம் ஆகியவற்றை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பிறகும் அவர் இன்னமும் முழுமையாகக் குணமடையவில்லை என்றும், உடல் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவரது மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மருத்துவச் செலவுகளுக்காகப் பெருமளவு பணம் செலவாகியுள்ள நிலையில், மேலதிக பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் குடும்பத்தினர் உள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!