news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பொகவந்தலாவையில் வேன் மோதி பெண் தொழிலாளி படுகாயம்

29 Sep, 2026

பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தில் திங்கட்கிழமை (28) மாலை 5 மணியளவில் வேன் மோதி, பெண் தோட்டத் தொழிலாளியொருவர் படுகாயமடைந்துள்ளார். 


பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நகரம் நோக்கி பயணித்த வேனொன்று, சாரதியின் கட்டுப்பாட்டைமீறி , மேற்படி தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  

இதன்போது, கொழுந்து மடுவத்துக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் தோட்டத்தொழிலாளி மீது வேன் மோதியதில், அவர் படுகாயம் அடைந்துளளார்


பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்  மேலதிக சிகிச்சைக்காக   டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 


கைது செய்யப்பட்டுள்ள வேன் சாரதியை இன்று செவ்வாய்க்கிழமை (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!