news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்

07 Jul, 2026
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (5) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். 

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழுவினர், உடனடியாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். 

நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரிடம் அவர்கள் முதற்கட்ட வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணம் குறித்துப் பொலிஸாரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!