அடங்கிய 101 கிலோகிராம் 870 கிராம் எடையுடைய தொகையை நாட்டுக்குள் கடத்துதல், உடைமையில் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தென் ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேற்படி 5 மீனவர்களும், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், 150 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையைக் கரைக்குக் கொண்டுவருவதற்காக, மிரிஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் 'சுட்டி மல்லி' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடம் மீனவர்கள் 5 கோடி ரூபா கோரியுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜி. சானக உதய குமார, எச்.டபிள்யூ. மது சங்க, பி. உதய குமார, பிரசன்ன உதய குமார மற்றும் சசிந்து சாமிக்க ஆகிய 5 சந்தேகநபர்களாவர்.
கடந்த நவம்பர் 13ஆம் திகதி ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் காலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!