சமாதான ஒப்பந்தம் காரணமாக, விடுதலைப்புலிகள்; கொழும்பு உட்பட பல இடங்களுக்;குச் சுயாதீனமாக சென்றுவர வாய்ப்புகளைத் திறந்துள்ளதால் அவர்;கள் எவ்வித தலையீடுமற்ற வகையில் ஆயுதங்களையும் இதர தேவைகளையும் எடுத்துச் சென்றார்கள் என கடந்த பத்தியில் பார்த்தோம்.
ஒரு புறத்தில் விடுதலைப்புலிகள் தம்மைப் பலப்படுத்திச் செல்கையில் இலங்கை அரசு சமாதான நிலமைகளைப் பயன்படுத்தி ராணுவ மற்றும் ஆயுதங்களுக்கான செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இவை ஒரு சிக்கலான அரசியல் நிலமையைத் தோற்றுவித்தது. அதாவது ஜனாதிபதி ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், புதிதாக தெரிவு செய்யப்;பட்ட பிரதமர் இன்னொரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்தார். பாதுகாப்பு
அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ராணுவத் தீர்வில் அதிகம் நாட்டமுள்ளவர்.
இதனால் விடுதலைப்புலிகள் இந்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்துவார்கள்? என்பதை அவர் நன்கு
புரிந்திருந்தார்.
பிரதமரைப் பொறுத்தவரையில் சமாதானத்;திற்கான முன்னேற்றம் காணப்படுவதாக அவர் உணர்ந்திருந்த போதும்;, இந்த சமாதான இடைவெளியை விலைப்புலிகள் பயன்படுத்தி தமது அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராவார்கள் என்பதையும் தெரிந்திருந்தார்.
ராணுவ உயர்;மட்ட அதிகாரிகளும் போர்நிறுத்த ஏற்பாடுகளை ஆதரித்துச் சென்றமையால் அப்போது ஏற்பட்டு வரும் ஆபத்து நிலமைகள் குறித்து அசட்டையாக இருந்தனர்.

பலர் தமது ஆற்றலையும், மூலோபாய அணுகுமுறைகளையும் இழந்திருந்தனர். இப் பின்னணியில்தான் சரத்
பொன்சேகா மீளவும் யாழ். வருகிறார். நிலமைகளைக் கண்டு வெறுப்படைகிறார்.
அத்துடன் விடுதலைப்புலிகளின் அப்போதைய செயற்பாடுகளை அவதானித்த நிலையில் அவரின் கவலை
அதிகரித்துச் சென்றது.
யாழ்ப்பாணத்தில் நிலமைகள் மிக மோசமடைந்து காணப்பட்டது. விடுதலைப்புலிகள் அடிக்கடி ராணுவத்தினருடன் முரண்பட்டுச் சென்றனர். அவர்கள் ராணுவத்தினரின் சில முகாம்களை மூடும்படியும், தாம் அங்;கு சென்று அப் பகுதி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் முறையிட்டனர்.
இவை யாவும் ராணுவத்தால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் விசனமடைந்து காணப்பட்டனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இப் பிரச்சனையில் தலையிட்டு தீர்ப்பதற்கும் தயாராக
இருக்கவில்லை. இதனால்; முரண்பாடுகள் அதிகரித்துச் சென்றன.
ஒருமுறை விடுதலைப்புலிகள் ஒரு ராணுவ முகாமிற்குள் சென்று பொருட்களைச் சேதமடையச் செய்தார்கள். இவ்வாறாக விடுதலைப்புலிகள் அடிக்கடி ராணுவத்தைச் சீண்டிய போதிலும் ராணுவத்தினர் பாரிய நிலமைகளைத் தவிர்த்து வந்தனர்.
அதே வேளை சரத் பொன்சேகா கண்காணிப்புக் குழுவினர் முன்னிலையில் முறைப்பாடு செய்தும், நிலமைகள் கட்டுப்பாட்டுடன் இருக்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்ததோடு, தாக்குதல் என்பது
இறுதியான தேர்வு என்ற முடிவை எடுத்திருந்தனர்.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல முக்கியமான முகாமிற்குள் சென்று பொருட்களுக்குச் சேதம் விழைவித்த சில நாட்களுக்குப் பின்னர் இன்னொரு முகாமிற்குள் செல்ல எத்தனித்தனர்.
இம் முறை குறைந்த அளவிலான தாக்குதலை நடத்துமாறு சரத் பொன்சேகா அறிவுறுத்தியதற்கிணங்க அவ்வாறான ஒரு தாக்குதலுடன் அவை முடிவடைந்தன.

இத்தகைய பதிலடி காரணமாக, விடுதலைப்புலிகள் அவ்வாறான முயற்சிகளில் பின்னர் ஈடுபடவில்லை.
இவை குறித்து கண்காணிப்புக் குழுவினர் மத்தியில் அதிருப்தி காணப்பட்ட போதிலும் அவர்களும் மௌனமாக இருந்தனர்.
வடக்கில் நிலமைகள் இவ்வாறாக மோசமடைந்து செல்கையில் கிழக்கிலும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துச் சென்றன. வடக்கிலும், கிழக்கிலும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் துரிதமடைந்தன. பொலநறுவ மாவட்டத்திலுள்ள தொப்பிக்கல சிங்கள மக்கள் வாழும் காட்டுப்பகுதியில் தமது கிழக்குப் பிரதேசத்திற்கான தலைமையகத்தை நிறுவினர்.
அதே போலவே இன்னொரு முக்கிய பிரதேசமான சம்பூரிலும் அதாவது திருகோணமலை துறைமுகத்திற்குத் தெற்குப் பகுதியிலும் நிறுவினர். அப் பகுதியிலிருந்து கடற்படை நடவடிக்கைகளை அவர்களால் கண்காணிக்க முடியும்.
இவ்வாறாக நாட்கள் கடந்து சென்றபோது பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய மாற்றம் ஏற்பட்டது. அப்போதைய பிரதமரைத் தவிர சில தனிப்பட்ட அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் பலர் போர் நிறுத்தம் குறித்து நம்பிக்கை இழந்திருந்தனர்.
ஆனால் விடுதலைப்புலிகள் தமக்கான பாதுகாப்பு கவசமாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தினார்கள். போர்க் களங்களில் செயற்படும் புதிய தலைமுறை ராணுவ அதிகாரிகள்கூட போர்நிறுத்த ஒப்பந்தத்தினைச்
சந்தேகமாகவே பார்த்தனர்.
சரத் பொன்சேகா உட்படப் பலர் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பெறுமதி குறித்து சந்தேகமே தெரிவித்தனர். ஆனால் பிரதமரும் அவரது நிர்வாகமும் பயங்கரவாதத்தினைத் தோற்கடிப்பதில் போதிய முன்னேற்றம் காணப்படுவதாகவே தெரிவித்தனர்.

சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகள் தாய்லாந்தில் அரசு தரப்பினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நடைபெற்றது.
அரச தரப்பில் பல அரசியல்வாதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ராணுவத்தின் மூன்றாவது உயர் அதிகாரி மற்றும் பலர் ஈடுபட்டனர்.
விடுதலைப்புலிகள் தரப்பில் விடுதலைப்பலிகளின் கிழக்குத் தளபதியும், பிரபாகரனுக்கு அடுத்;த
இரண்டாவது தளபதியான கருணா அம்மான், பிரித்தானிய பிரஜையும், தந்திரோபாய
வகுப்பாளருமான அன்ரன் பாலசிங்கம் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடற்ற சில தமிழ்
சிவிலியன்கள் என்போராகும்.
அத்துடன் நோர்வே நாட்டின் அமைச்சரான எரிக் சோல்கெய்ம் மத்தியஸ்தராகவும் இவருக்கு உதவியாக ஐரோப்பிய மற்றும் யப்பான் பிரதிநிதிகள் செயற்பட்டனர்.
இப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன் வைத்தனர். போர் நிறுத்தம் தொடர வேண்டும் எனக் கருதி பிரதமர் அக் கோரிக்கைகளை நாட்டின்; பாதுகாப்புக் குறித்து எவ்வித சிந்தனையுமில்லாமல் அவற்றை நிறைவேற்றும் நிலையிலிருந்தார்.
குறிப்பாக, விடுதலைப்புலிகள் வடக்கு, கிழக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றக் கோரினர். இந்த உயர் பாதுகாப்பு வலையத்திற்குள்தான் ராணுவக் கட்டளைத் தலைமையகம், ராணுவத் தளங்கள், விமான இறங்குதுறை, கடற்துறைமுகம் அமைந்திருந்தன.

விடுதலைப்புலிகளுக்கு இவை பெரும் தடையாக இருந்தன. ஆனால் ராணுவத்தினர் இவற்றை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. சரத் பொன்சேகா இப் பிரச்சனை குறித்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலையங்களை எக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுப்பதில்லை
எனவும், இவை கைவிடப்படுமாயின் குடாநாட்டைப் பாதுகாப்பதில் ராணுவத்திற்குப் பல இடர்கள் ஏற்படலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் நிர்வாக அதிகாரிகள் ராணுவம், விடுதலைப்புலிகள், சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் என்பவர்களுக்கிடையே ஒரு சந்திப்பை பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமது எண்ணத்தை நிறைவேற்றுவதற்கான தருணமாக இதனை விடுதலைப்புலிகள் கருதினர். இந்த ஏற்பாடு குறித்து
சரத் பொன்சேகா தரப்பினர் சந்தேகம் கொண்டிருந்த போதிலும், அக் கூட்டத்தில் நியாயமற்ற
பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக் கோரிக்கைகளின் உள் நோக்கங்களை அரச அதிகாரிகள் புரிய முடியாதிருந்தனர். பல தடவைகளில் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராணுவ உயர் அதிகாரிகளை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளின் சில உறுப்பினர்களை “மச்சான்” என நண்பர்களை அழைப்பது போல் பேசினார்.
இவ்வாறான அணுகுமுறை மிகவும் ஆபத்தானது என சரத் பொன்சேகா கருதினார். இவை பிரச்சனையை மிகவும் எளிமையானதாகக் கருதுவது போலவும், ராணுவத்தின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
இக் கால வேளையில் பலாலி ராணுவ உயர் பாதுகாப்பு வலையத்தை மூடுமாறு
விடுதலைப்புலிகள் கோரினர். அது சாத்தியமானதா?
தொடரும்…..
தமிழ் மொழிச் சுருக்கம்
மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!