பொதுவாக மாமியார் - மருமகன் உறவு என்பது தாய் - மகன் போன்ற புனிதமான பிணைப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மரபையே தலைகீழாக மாற்றும் வகையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
வாலிபர் ஒருவர் தனது மனைவியை உதறித் தள்ளிவிட்டு, சொந்த மாமியாரையே கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து, நீதிமன்றத்தில் முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேசம், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால், இருவரும் பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், மகள் சண்டை போட்டுவிட்டுத் தாய்ப் வீட்டுக்குச் சென்றதும், குறித்த மாமியார் தனது மருமகனைத் தொடர்புகொண்டு நலம் விசாரிப்பது போல் ஆறுதல் கூறி வந்துள்ளார்.
சொந்த மகளின் வாழ்க்கை சீரழிவதைத் தடுத்து, இருவரையும் சேர்த்து வைக்க வேண்டிய அந்த மாமியார், மாறாக மருமகனுக்கு ஆதரவாகப் பேசி வந்துள்ளார்.
அத்தோடு, தனது சொந்த மகளுக்கு எதிரான கருத்துகளையும் மருமகனிடம் கூறி வந்துள்ளார். மாமியாரின் இந்த வெற்றுப் பேச்சில் மயங்கிய மருமகன், அவர் சொல்வதற்கெல்லாம் தலையசைக்கத் தொடங்கினார்.
ஆறுதலாகத் தொடங்கிய இந்தத் தொடர்பு, நாளடைவில் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும் எல்லையைக் கடந்து பழகியுள்ளனர். இருவருக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்தத் தொடர்பு இரகசியமாக நீடித்து வந்துள்ளது.
தங்களது இந்த கள்ளத்தொடர்பு வெளியில் தெரிந்தால் சமூகத்தில் அவமானம் ஏற்படும் என்பதை உணர்ந்த இருவரும், திடீரென வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் சொல்லாமல் அவர்கள் இருவரும் மாயமாகினர்.
வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி கான்பூர் நகர் நீதிமன்றத்திற்குச் சென்று, அங்கு தங்களது வயதுச் சான்றிதழ்கள் மற்றும் பரஸ்பர சம்மதக் கடிதங்களைச் சமர்ப்பித்து, சட்டப்பூர்வமாகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திலேயே இருவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணச் சடங்குகளைச் செய்ததோடு, கைகளைக் கோர்த்தபடி 'புதுமணத் தம்பதியராகத்' தேனிலவுக்காகவும் சென்றுவிட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!