news@ilakkiyainfo.com

பிரிவுகள்

-மட்டக்களப்பில் ஐவர் கொலை- மட்டக்களப்பில் ஐவர் கொலை- பிள்ளையானுக்கு விளக்கமறியல் டிசம்பர் 7ஆம் திகதிவரை நீடிப்பு

25 Nov, 2026
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதான பிள்ளையான் மற்றும் இரா ணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளர்கள் இருவர் அடங்கலான மூவரை டிசம்பர் 7ஆம் திகதிவரை மறியலில் வைக்க மட்டக்கப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் நேற்று உத்தர விட்டுள்ளார்.


2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் சுட்டுக் கொல்லப் பட்டமை, காத்தான்குடியில் வைத்து ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக இருவர் சுட்டுக் கொல்லப் பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத் திக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற் றுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவங் களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகி யோரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்திருந்தது. 

இவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வழக்குத்தாக்கல் செய்து, அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தித் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று திறந்தமன்றில் பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிள்ளையான் நேற்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கு ஒன்றுக்கு ஆஜராகியுள்ள தால், அவரைக் காணொளி ஊடாக ஆஜர்படுத்த முடியவில்லை எனச் சி றைச்சாலை அதிகாரிகள் நீ திமன்றில் எழுத்துமூல ஆவணத்தைச் சமர்ப்பித்தனர். 

அத் துடன், இச்சம்பவங்கள் தொடர் பான சாட்சியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சமர்ப் பணங்களை முன்வைத்தனர். 

இதனையடுத்து, சந்தேகநபர் களை டிசம்பர் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன், லண்டனில் உள்ள சந்தேக நபரான 'பொலிஸ் பாய்ஸ்' என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்குத் தொடர்ந்து திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!