news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

07 Aug, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஈடுபட்டுவருவதுடன், இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு  சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பை அடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர்  நிறுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேவேளை, இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலை பகுதியை சுற்றியுள்ள வீதிகளில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக சிறைச்சாலை ஆராய்ந்து கொண்டார்.

தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன், இன்றையதினம்  980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர்  மோகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்
07/08//2026

நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமையை ஆராயும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.


அண்மையில் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, அவற்றின் தாக்கம் ஏனைய சிறைச்சாலைகளிலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


குறிப்பாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!