news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

15 May, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் மூன்று மாத கால சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை (14) காலை சிறைக்காவலர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பியோடியுள்ளார். மொறக்கொட்டாஞ்சேனை, தேவபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார். நபர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் அண்மையில் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இன்று காலை சிறைச்சாலைக்கு வெளியே உள்ள கட்டுமானப் பணி ஒன்றில் 'மேசன்' (கட்டிட வேலை) பணிக்காக அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்த சமயம், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கைதியைக் கண்டுபிடிப்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகச் சிறைச்சாலை நிர்வாகம் தரப்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!