news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பு நீதிமன்றம் அருகே தனக்கு தானே தீ வைத்த முதியவர் பலி

14 Nov, 2026
மட்டக்களப்பு திறந்த நீதிமன்றில் தனக்கு சாதகமாக நீதி வழங்காவிடில் தற்கொலை செய்வேன் என தெரிவித்து முதியவர் ஒருவர்  நீதிமன்ற கட்ட தொகுதிக்கு  அருகிலுள்ள வீதியில் நேற்று (13) அதிகாலை தனக்கு தானே  மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 104 பேர் தற்கொலை செய்து  கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மட்டுநகர் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த 66 வயதுடைய கதிர்காமத்தம்பி குணசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்  24 ஆம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள காணி ஒன்று தொடர்பாக குறித்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்டவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே காணி பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முரண்பாடு இடம் பெற்றதை அடுத்து   பொலிஸார் குறித்த நபர் உட்பட 6 பேரை அப்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளி வந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு தொடர்ந்து விசாரணை இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு வியாழக்கிழமை (12) திறந்த நீதிமன்றில் இடம்பெற்று அதற்கான தீர்ப்பு திகதியை நீதவான் அறிவித்த போது குறித்த நபர் நீதிமன்றில் கையை உயர்த்தி குறித்த தீர்ப்பு தனக்கு சாதகமாக வழங்க வேண்டும் இல்லையேல் தற்கொலை செய்வேன் என சத்தமிட்ட நிலையில் அவரை நீதிமன்ற பொலிசார் அங்கிருந்து வெளியேறினர் .

இதனை தொடர்ந்து குறித்த நபர் சம்பவ தினமான நேற்று  அதிகாலை சுமார் 5.00 மணியளவில் நீதிமன்றத்துக்கு அருகே உள்ள வீதியில் மக்கள் நடமாட்டம் அற்ற நேரத்தில் தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தையடுத்து தீயில் எரிந்ததை கண்டவர்கள் உடனடியாக பொலிஸார் மற்றம் 1990 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் படுகாயமடைந்த வரை போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி பகல்11.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் 13 ஆம் திகதிவரை 104 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், இந்த நவம்பர் மாதம் மட்டும் 5 பேர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!