news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் ஆணின் சடலம்! ; அடையாளம் காண பொதுமக்களை நாடும் பொலிஸார்

18 Aug, 2026
மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலை மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை நாடுமாறும் பாசிக்குடா பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கடற்கரைப் பகுதியில் இன்று காலை கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், சடலமொன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

இதனையடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!